Thursday, 11 August 2016

அழைப்பாயோ.... அல்லால் அகல்வாயோ...!

ஆலயங்களில் நிறைவேற்றக்கூடிய பூஜைகளில் ஏற்படும் சில தவிர்க்க முடியாத தவறுகளைக் களைவதற்காக, குறைகள் நீங்கிப் புதுப்பொலிவு பெற பவித்ர உற்சவம் செய்வது அவசியம்....பவித்ர உற்சவத்தில் பவித்ர மாலைகளுக்கு விசேஷ ஜபங்கள் செய்து தெய்வத்திற்கு சானித்தியம் ஏற்படுத்தக் கூடிய வேத மந்திரங்களால் ஹோமம் செய்வதாலும் பூஜைகள் நடத்தப்படுவதாலும் ஒரு வருடத்தில் அன்றாடம் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகுகின்றன. இது சாஸ்திரம் சொல்வது...!

பெரிய ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்கிறார்கள்.... பேர் கேள்விப் பட்டு இருந்திருப்போம்... ஆனால், ஏன் , எதற்கு என்று தெரியாது....!

சாஸ்திரம் சொல்வதை விடுங்கள்...! என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய, தோன்றிய ஒரு விஷயம்....!

ஏதோவொரு ஆத்திர அவசரம்னு வரும்போது,  ஓட்ட ஓட்டமா ஓடி , முதல்ல அந்த ஆபத்தில் இருந்து பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற தான் மனசாட்சி உள்ள ஒவ்வொருத்தருக்கும் தோன்றும்..... அந்த நேரத்தில் 
சாஸ்திர சம்ப்ரதாயம் எதுவும் கண்ணுக்கு தெரியாது... சரிதானே..?

கர்ப்பகிரகத்தில் இருக்கும் பெருமான் அங்கே மட்டும் தான் இருப்பார்னு நினைக்கிறீங்களா...? கோவிலைப் பட்டர் பூட்டி விட்டு சென்ற பிறகு , திரும்ப மறுநாள் வந்து திறக்கும்வரை - சாமி உள்ளே மட்டும் தான் இருக்கும்னு நினைக்கிறீங்களா...? 

கல்லுக்குள் , பாறைக்குள் இருக்கும் தேரையைக் கூட - அதற்க்கு தேவையான உணவு அளித்து , சக்தியோடு வைத்து இருக்கும் பெருமான் - அடங்கி இருப்பவரா...? அதனாலே , அங்கே , இங்கே என்று எங்கும் நடமாடும் பெருமானுக்கு - சென்ற இடங்களில் எதாவது குறைபாடுகள் இருந்தாலும் அந்த தோஷம் நீங்க, அவர் மனம் குளிர , புதுப் பொலிவுடன் வந்து - முறையிடும் பக்தர்களின் வேண்டுதல்கள் விரைந்து நிறைவேற்ற - இந்த உத்சவம்...! ஒரு புத்துணர்வு ஊட்ட , RECHARGE செய்ய  - இந்த மாதிரி ....! 

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்கள் பழமையான பெருமாள் ஆலயம்...! ஏதோவொரு காரணத்தால் தடைப்பட்ட - இந்த உற்சவம் , மீண்டும் தொடங்க, அந்த பரம்பொருள் அடியேனை இந்த முறை தேர்ந்தெடுத்து இருக்கிறது....! ஒவ்வொரு வருடமும் தங்கு தடையின்றி தொடர்ந்து நடக்கவும் , அந்த பரம்பொருள் கருணை புரியட்டும்......!

இது எல்லாம் செய்யறது மூலமா , ஏதாவது பலன்கள் உண்டா என்று யோசிக்கவேண்டாம்....!  ஜென்ம ஜென்ம பாவங்கள் , தோஷங்கள் - சந்ததிக்கே வராமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது....! கஷ்டங்கள் இல்லமால் வாழ்க்கை இருந்தால் சுவாரஸ்யமா....? அந்த கஷ்டங்கள் தாங்க முடிகிற அளவுக்கு கொடு...! தவிக்கும்போது , கை தூக்கி விட ஒரு வாய்ப்பு கிடைக்க வழி செய்...! இப்படித்தானே கேட்கிறோம்...! எதிர்பாராத இன்னல்கள் வந்து வாழ்க்கை நிலைகுலைந்து போகாமல் , மன நிம்மதி கிடைக்க - இறை அருள் புரியும்...! அதை எல்லாம் விடுங்க...! இந்த வருஷம் நாம செய்கிறோம் ......! இதே அடுத்த வருடம் நம்மோட வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கப்போகுதுன்னு உங்களுக்கே புரியப் போகுது...! இந்த வருடம் நேரம் குறைவாக இருந்ததாலே, உங்க யாருக்கும் முன் கூட்டியே சொல்லவில்லை...... அடுத்த வருடம் , நாம எல்லோரும் சேர்ந்தே செய்யலாம்...! என்ன சொல்றீங்க.....?

ஆடி, ஆவணி , புரட்டாசி - மூன்றில் எதோ ஒரு மாதத்தில் - மாத வளர்பிறை ஏகாதசி ஆரம்பித்து - இந்த பூஜை அந்த அந்த ஆலயத்தை பொறுத்து மூன்று நாட்களில் இருந்து ஒன்பது நாட்கள் வரை நடைபெறும்...! இந்த முறை , விடுமுறை தினங்களும் அமைந்து இருப்பது அவர் கருணை என்றே நினைக்கிறேன்...!

உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நேரில் வந்து ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்...! வாய்ப்பு கிடைத்தால் , உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களிலும் - நீங்கள் முன்னின்று பவித்ரோத்சவம் நடக்க வழி செய்யுங்கள்...! நான் மட்டும் மேலே மேலேன்னு வந்தா போதுமா...! நாலு பேருக்கு சொல்வோம்....! வாய்ப்பு இருக்கிறவங்க பயன் படுத்திக்க கொள்ளட்டும்ன்னுதான் இதை உங்களுக்கு இங்கே தெரியப் படுத்தியது...!

======================================

"குடும்பத்துக்கு தோஷமா ....? இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...? எல்லாம் நம்ம கையிலே தான் சார் இருக்கு...! புத்தி தெளிவா இருந்தா போதும்....!"

"அண்ணே , கை கொடுங்க...! - இது நிச்சயமா உங்களை மாதிரி ஆளுங்களுக்கு இல்லை...! நீங்க உங்க பாட்டுக்கு நிம்மதியா , உங்க பாதையிலே போய்க்கிட்டே இருங்க...!"

சமீபத்தில் - நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம்...! ஒரு அளவான , அழகான குடும்பம். அரண்மனை மாதிரி வீடு..! நல்லா படிச்சு , கைநிறைய சம்பளம் வாங்கிய ஒரு குடும்ப தலைவன். அனுசரிச்சு மகாலட்சுமி அம்சம் மாதிரி வாழ்க்கைத் துணை. ஊர்கண்ணே படும் அளவுக்கு , யூனிவர்சிட்டி மெடல் வாங்கின, பையன். வெளிநாட்டு வேலை.... ! அவங்க நல்ல மனசுக்கு அற்புதமா வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு...!

வயசு ஆகிடுச்சு , பிள்ளைக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுப்போம்னு , தேடி தேடி சலிச்சு - ஒரு பெண்ணை , கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கிறாங்க...! அம்மணி வக்கீல் படிச்சு இருக்கிற பெண்...! 

அவ்வளவுதான்...! அதுக்கு அப்புறம் வாழ்க்கை தலைகீழ் மாற்றம்...! ஏதோவொரு சின்ன பிரச்னை...! புதுசா வந்த பொண்ணு ஆடின ருத்ர தாண்டவம், மூணு பேரும் ஜெயிலுக்கு போய் இருக்கிறாங்க...! அந்த பொண்ணு கிட்ட தினம், அடி - உதை வாங்கி, அசிங்க அசிங்கமா வார்த்தைகள் கேட்டு , பயந்து பயந்து செத்ததுக்கு - ஜெயில் பரவா இல்லை...! ஏற்கனவே நாங்க மனசு அளவுல செத்திட்டோம் சார்..! 
- இப்படி சொன்னது , நிஜமாவே ராஜா மாதிரி , கம்பீரமா , அடுத்தவர்கள் பொறாமைப் படும்படி வாழ்ந்த குடும்பத்தோட , புலம்பல் வார்த்தை....! 


ஒரு குடும்பம் நல்லா இருக்க கூடாதுன்னு பிளான் பண்ணி வன்மம் வைச்சவங்களுக்கு - யாரும் போய் சமாதானம் பேசவா முடியும்....! மொத்த சொத்தும் என் பேர்ல எழுதிக்கொடு , கேஸ் வாபஸ் வாங்குறேன்... விவாகரத்து கொடுக்கிறேன்... ! அவ்வளவுதான்...! 

எல்லாம் எழுதிக் கொடுத்திட்டு...?
"அப்புக்குட்டி , கோட்டை அழிச்சிட்டு - திரும்ப ஆரம்பிடா" ங்கிறதுக்கு இது என்ன புரோட்டா சமாச்சாரமா....? ஒரு தலைமுறை போராட்டம் திரும்ப ஆரம்பிக்கணும்...! இது மாதிரி கொஞ்சமா, நஞ்சமா...! 
வீட்டுக்கு புதுசா வந்த மருமகன் ஆடுற ஆட்டம் , ஆயிரக் கணக்குல இல்லையா...? வீட்டுக்கு வாடகை வந்திட்டு , காலி பண்ண மாட்டேன்னு - ஆளுங்கள விட்டு அடிக்க வைக்கிற ரவுடிகள் எத்தனை எத்தனை...?

மனசு அறிய ஒரு பாவமும் பண்ணலையே...! ஏன் ? எனக்கு மட்டும் ஏன்...?
புலம்பி என்ன பண்றது ...?

சாமி கும்பிடுறது - கண்ணுக்கு முன்னே தெரியிற எதிரிகளை கவனிக்க மட்டும்னா நினைக்கிறீங்க...? கண்ணுக்கு தெரியாம...?

ஐயா எனக்கு விவரம் தெரியுது , நாலு இடம் பழகுறோம்... நெளிவு , சுளிவு தெரியும்........! சமாளிச்சுடுவேன்...! என் பசங்க..! அவங்க பிள்ளைங்க...! அதுக்கு அடுத்த தலைமுறை...? எங்கேயோ ஒரு இடத்துல சங்கிலி கண்ணி - பலம் இல்லைனா கூட , பயன் இல்லையே....! வெறும் அறிவு மட்டும் போதும்னா நினைக்கிறீங்க...! 

இல்லை சார்...! இது வேற ஒரு புது விஷயம்...! இந்த மாதிரி ஒரு எண்ணம் உங்களுக்கு வருவதற்க்கே, உங்களோட முன்னோர்கள் தவம்  / பிரார்த்தனை செய்து இருக்கணும்...!  நிறைய யோசிங்க...! நல்லது நடக்கும்...!

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் - இன்றும் சித்தர்கள் , தகுதி உள்ள சிலருக்கு தெளிவாக வழிகாட்டுகிறார்கள் ....! அந்த தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்...!

குருவருளும், திருவருளும் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க பரம்பொருளை தியானித்து விடை பெறுகிறேன்...!

மீண்டும் சிந்திப்போம்...!
வாழ்க அறமுடன்...! வளர்க அருளுடன்...!

ரிஷி23 comments:

 1. அருமையான கட்டுரை, நன்றிகள் பல :)
  பவித்ரோத்ஸவம் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கோடி நன்றிகள்....இறைவனுக்கும் , குருவிற்கும்(ரிஷி ஐயா ).... இந்த சிறப்பு விசேசங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு அமைத்தமைக்கு ....

  ReplyDelete
 3. Rishi Anna, thanks a lot for sharing the article.Niraya kelvikalukku pathil kidaitha nimathi.
  Regards,Raghu.

  ReplyDelete
 4. நன்றி சார் இந்த பதிவு எங்களுக்கு கிடைத்ததே முன்னோர்களின் ஆசி தான்

  ஒரு சின்ன விண்ணப்பம் அடுத்த முறை இது போன்ற நிகழ்வுகளை 10 நாட்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் கலந்து கொள்ள உதவியாக இருக்கும்

  ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி போற்றி

  ReplyDelete
 5. இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லை என்று சொல்வதில்லை... பொறுமையுடன் கேட்டு பாருங்கள்... அவன்....

  ReplyDelete
 6. மிக்க நன்றி ஐயா,

  அறுமையான கட்டுரை நன்றிகள் உரித்தாகுக. பவித்ரோத்ஷவம் நல்லமுறையில் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்,

  வேணுகோபால் மாரிமுத்து மும்பை 400088

  ReplyDelete
 7. Good morning Rishi Sir. Thanks for explanation of Pavithra vurvasam..My parents will attend.

  ReplyDelete
 8. Thanks for the good information Jii. With HIS blessings we will participate the Pavithra Uthsavam in temples near our city. Actually, from your post only I learned about this Uthsavam. Thanks for not only making us rich in financial but also in the way of spiritual upliftment. May God Bless you and your family.

  ReplyDelete
 9. Wonderful Article. My Best wishes & Thanks for the invite. Pray for entire Sakurtaya Family.

  ReplyDelete
 10. பவித்ரோத்ஸவ விழா இனிதே நிறைவேற அருள்மிகு சுந்தரவல்லி செளந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜப்பெருமாளின் திருவடி பணிந்து வணங்கி வாழ்த்துகிறோம்.ஓம் நமோ நாராயணாய நமஹ.

  ReplyDelete
 11. Thank you so much Rishi sir!! pavitra utsavam clear explanation!!!!

  ReplyDelete
 12. All is his blessings....Great feel sir...God bless you and family sir.

  ReplyDelete
 13. மிக்க நன்றி

  ReplyDelete
 14. மிக நல்ல முயற்சி மற்றும் அருமையான பதிவு.

  ReplyDelete
 15. வணக்கம் ரிஷி ஐயா, அருமையான பதிவு , நன்றி. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .

  பாலு காங்கோ

  ReplyDelete
 16. Rishi Sir,
  இதுவரை என் சிற்றரிவுக்கு தெரியாத பவித்ர உச்சவம் குறித்த விளக்குமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 17. மிக்க நன்றி சார். பவித்ர உற்சவம் மிகவும் சீரும் சிறப்புடன் நிறைவு பெற இறைவனிடம் வேண்டுகிறோம். தங்களோடு நாங்களும் இறை பயணம் மேற்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 18. //நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் - இன்றும் சித்தர்கள் , தகுதி உள்ள சிலருக்கு தெளிவாக வழிகாட்டுகிறார்கள் ....! அந்த தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்...!//

  மிக்க சரி. நல்லதே நினைப்போம் எத்தனை கஷ்டத்திலும். பலன் ஜென்மங்கள்தோறும் தொடர்ந்து வரும்.

  ReplyDelete
 19. நின்னை சில வரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி எனக்கேதும் கவலையறச் செய்து மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் சந்தோஷங் கொண்டிருக்ககச் செய்வாய்.

  ReplyDelete
 20. Respected sir,

  Thank you for your message on Pavithra Utsavam and Three days poojas to be held at Kangeyanallur, Katpadi. I am also interested to participate in the poojas. It is really good effort to remove all sins in the past years. Interested members come and participate and get the blessings of the Almighty thro' Rishi sir.

  with kind regards,

  Visvanathan N

  ReplyDelete
 21. மிக்க மகிழ்ச்சி பவித்ர உற்சவம் நலம்,வளம் பெற இறை அன்புடன் விழா இனிதே நிறைவேற வாழ்த்துகிறோம்.

  ReplyDelete